பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானத்தில் முற்றுகை போராட்டம்!
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில், ஐபிஎல் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற கூடாது என அரசியல்வாதிகள், பொதுமக்கள் என தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சேப்பாக்கம் விக்டோரியா சாலையில் உள்ள எம் ஜே கோபாலன் கேட் முன்பு திரண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசை எதிர்த்து கோஷம் எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகத் தெரிகிறது.

Comments
Post a Comment